சபரிமலை நடை திறப்பு: தமிழகத்தில் இருந்து சிறப்பு பஸ்கள்

இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 18 ஆம் படி வழியாக அனுமதிக்கப்பட்டனர்.

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு, சபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று(நவம்பர் 16)மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.

கோயில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டினார்.

நடை திறப்பையொட்டி ஐயப்பனை தரிசிப்பதற்காக பல ஆயிரம் பக்தர்கள் காலை முதலே பம்பையில் காத்திருந்தனர்.

மதியம் 2 மணிக்கு மேல் கோயிலுக்குச் செல்ல அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 5 மணிக்கு நடை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து சுவாமி தரிசனம் செய்ய 18 ஆம் படி வழியாக அனுமதிக்கப்பட்டனர்.

Sabarimala Devotees allowed through the 18th step

கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதியான நாளை அதிகாலை 4 மணிக்குப் புதிய மேல்சாந்தி சபரிமலை நடையைத் திறந்து பூஜைகள் மேற்கொள்வார்.

டிசம்பர் மாதம் 26-ம் தேதி மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு தங்க அங்கி சார்த்தி தீபாராதனை நடைபெறும். இதைத்தொடர்ந்து டிசம்பர் 27 ஆம் தேதி மதியம் மண்டல பூஜை நடைபெற்று அன்று மாலை நடை சாத்தப்படும்.

மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும். ஜனவரி 14-ம் தேதி மகரவிளக்கு ஜோதி தரிசனம் நடைபெறும். ஜனவரி 20-ம் தேதி மீண்டும் சபரிமலை நடை சாத்தப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை 16.11.2022 முதல் 27.12.2022 வரையும் மற்றும் மகர விளக்கு ஜோதி திருவிழா 27.12.2022 முதல் 14.01.2023 வரை நடைபெறுவதை முன்னிட்டு

Sabarimala Devotees allowed through the 18th step

சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக இந்து சமய அறநிலையத்துறை, ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் தகவல் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இத்தகவல் மையம் 16.11.2022 முதல் 20.01.2023 வரை செயல்படும்.  தமிழ்நாட்டிலிருந்து  சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இத்தகவல் மையச் சேவையினை

கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 044-28339999 ல் அழைத்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

இத்துடன் நாளை முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கலை.ரா

பிரியா மரணம்: தாமாக முன்வந்து மனித உரிமை ஆணையம் வழக்கு!

அவசியமில்லாமல் ஏன் அமித்ஷாவை பாக்கணும்? எகிறும் எடப்பாடி

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *