அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியாவின் அரை நிர்வாண புகைப்படங்களை ரஷ்ய டி.வி சேனல் ஒளிபரப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால் டிரம்ப் வெற்றி பெற்றார். டிரம்புக்கு மெலானியா என்ற மனைவி உண்டு . இவருக்கு 54 வயதாகிறது. டிரம்புக்கு 78 வயதாகிறது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டது குறித்து ரஷ்ய அரசுக்கு சொந்தமான ரஷ்யா 1 சேனலில் செய்தி ஒளிபரப்பானது.
அந்த செய்தியில் மெலானியாவின் கணவர் டிரம்ப் 2வது முறையாக வெள்ளை மாளிகையில் நுழைகிறார். அதே வேளையில், 2000 ஆம் ஆண்டு GQ இதழுக்கு மெலானியா கொடுத்த போஸை பாருங்கள் என்று அவரின் அரை நிர்வாண புகைப்படங்களுடன் செய்தியை ஒளிபரப்பியது.
ஒரு விமானத்தில் மெலானியா மாடலிங்குக்காக கொடுத்த போஸ் அது. டிரம்பையும் அவரின் மனைவியையும் கேலி செய்யும் விதத்தில் இந்த செய்தி இருந்தது. இதையடுத்து, ரஷ்ய டி.வியின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சோசியல் மீடியாவில், அமெரிக்கர்கள் தலை குனிவதை கண்டு ரஷ்யர்கள் சிரிக்கின்றனர் என்றும் இது மிகவும் தர்மசங்கடமானது என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்பிற்கு ரஷ்ய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம், பென்சில்வேனியா தேர்தல் பிரசாரத்தில் டிரம்பின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் குறிப்பிட்டு, டிரம்பின் தைரியத்தை புதின் அப்போது பாராட்டினார். இப்படியெல்லாம் வாழ்த்து தெரிவித்து விட்டு , ரஷ்ய அரசுக்கு சொந்தமான செய்தி சேனலே டிரம்பின் மனைவியை கேலி செய்யும்விதத்தில் செய்தி வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம் என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
டிரம்பின் மனைவி மெலானியா யூகோஸ்லேவியாவில் இருந்து பிரிந்த ஸ்லோவேனியா நாட்டை சேர்ந்தவர். 16 வயது முதல் மாடலிங்கில் ஈடுபட்டவர். இவர், 1996 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தார். நியூயார்க்கின் மன்ஹட்டன் பகுதியில் தொடர்ந்து மாடலிங்கில் ஈடுபட்டு வந்தார். 1998 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்பின் அறிமுகம் அவருக்கு கிடைத்தது.
இருவரும் டேட்டிங்கில் ஈடுபட்டு 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு பாரன் டிரம்ப் என்ற மகனும் உண்டு. 2016 ஆம் ஆண்டு முதன் முறையாக டிரம்ப் அதிபர் ஆன போது, அமெரிக்காவின் முதல் பெண் என்ற பெருமை மெலானியாவுக்கு கிடைத்தது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ராணுவ மரியாதையுடன் டெல்லி கணேஷ் உடல் தகனம்!
தாக்குதல் நடத்திய அமமுகவினர்… ஆர்.பி. உதயகுமார் புகார்!