கழிவறை கிண்ணங்களை திருடிய ரஷ்ய வீரர்கள்: உக்ரைன் அமைச்சர்!

இந்தியா

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் தொடங்கிய முதல் மூன்று மாதங்களில் உக்ரைனில் இருந்து ரஷ்ய வீரர்கள் 58 மெட்ரிக் டன் பொருட்களைத் திருடி தங்களது வீட்டுக்கு அனுப்பி உள்ளனர் என்று சொல்லப்பட்ட நிலையில் அவர்கள் கழிவறை கிண்ணங்களையும் திருடி சென்றுள்ளனர் என இந்தியா வந்துள்ள உக்ரைன் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

போர் ஆரம்பித்ததில் இருந்து பேச்சுவார்த்தை மற்றும் தூதரக வழியிலான முயற்சிகள் தீர்வு ஏற்பட வழிவகுக்கும் என்றும் அமைதிக்கான எந்தவொரு முயற்சியிலும் பங்காற்ற இந்தியா தயார் என்றும் இந்திய பிரதமர் மோடி தொடர்ந்து கூறி வருகிறார்.

பலரை பலி வாங்கிய இந்தப் போரில் உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் செயல்பட்டு வருகின்றன.

ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை விதித்து வருகின்றன. நிதி, ஆயுத உதவிகளையும் செய்து வருகின்றன.

எனினும், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் பலனற்று காணப்படுகின்றன.

Russian Soldiers even steal toilet bowls

இந்த நிலையில், உக்ரைனின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் எமின் தபரோவா நான்கு நாட்கள் பயணமாக கடந்த 10ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு போர் தொடங்கியதில் இருந்து, உக்ரைனில் இருந்து தலைவர் ஒருவர் இந்தியாவுக்கு வரும் முதல் அதிகாரபூர்வ பயணம் இதுவாகும். அவரை டெல்லியில் வெளிவிவகார அமைச்சகத்தின் மேற்கத்திய நாடுகளுக்கான செயலாளர் சஞ்சய் வர்மா சந்தித்து பேசினார்.

வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகியையும் சந்தித்தார்.  அப்போது மீனாட்சியிடம் கடிதம் ஒன்றை அளித்தார்.

அதில், இந்தியாவிடம் கூடுதல் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கேட்டு உக்ரைன் அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் போரை முடிவுக்குக்கொண்டு வந்து அமைதி ஏற்பட இந்தியா உதவ வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இந்தப் போரில் ரஷ்ய வீரர்கள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை பற்றியும் தபரோவா குறிப்பிட்டார்.

‘ரஷ்ய வீரர்கள் அவர்களுடைய மனைவி, தாயாருடன் பேசிய உரையாடல்களை நாங்கள் இடைமறித்து கேட்டோம்.

அதில், உக்ரைனில் உள்ள ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பல பொருட்களை திருடினோம் என அவர்கள் கூறினர்.

அதிலும், கழிவறை கிண்ணங்களைக் கூட அவர்கள் திருடி உள்ளனர் என உரையாடலில் இருந்து தெரிய வந்து உள்ளது’ என்று தபரோவா கூறியுள்ளார்.

தி மாஸ்கோ டைம்ஸ் கடந்த ஆண்டு வெளியிட்ட செய்தி ஒன்றில், உக்ரைனில் போரில் ஈடுபட்டு வரும் ரஷ்ய வீரர்கள், போர் தொடங்கிய முதல் மூன்று மாத காலத்தில், திருடிய 58 மெட்ரிக் டன் பொருட்களை தங்களது வீட்டுக்கு அனுப்பி உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

’ஆளுநர் மாளிகை.. முதல்வர் இல்லமாக மாற வேண்டும்’: கண்டன பொதுக்கூட்டத்தில் கோரிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஓபிஎஸ்-சசிகலா- டிடிவி…  ’சித்திரைக் கூட்டணி’க்கு  வைத்தி போடும் ஸ்கெட்ச்!

ஆளுநர்களுக்கு கடிவாளம்: பாஜக அல்லாத முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

பிஞ்சுக் குழந்தையை சிதைத்த முதிய பிசாசு – தமிழக பயங்கரம்!

+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *