கிம்மை சந்தித்த புதின்: ஏன்? எதற்காக?

Published On:

| By christopher

ரஷ்ய அதிபர் புதின் சுமார் 24 வருடங்களுக்குப் பிறகு வடகொரியா சென்று அதிபர் கிம்மை சந்தித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக கடும் பொருளாதார தடைகள் விதித்து வருகின்றன.

இதனால் வடகொரியாவின் உதவி ரஷ்யாவுக்கு தேவைப்படுகிறது. இதனால் வடகொரியாவுடனான நட்பை மேலும் வலுப்படுத்தி வருகிறது.

கடந்த வருடம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷ்யா சென்றிருந்தார். அப்போது ஆயுத கிடங்குகள், ஆயுத தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார்.

இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் இரண்டு நாட்கள் பயணமாக வடகொரியா சென்றுள்ளார். அவரை சிவப்பு கம்பளம் மரியாதையுடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கட்டித்தழுவி வரவேற்றார்.

இந்தச் சந்திப்புக்குப் பின்பு இரு நாடுகளுக்கும் இடை யில் கூட்டு ஒப்பந்தம் ஏற்பட்டதாகவும், அந்த ஒப்பந்தத்தில் புதின் மற்றும் கிம் ஜாங் உன் கையெழுத்திட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அந்த ஒப்பந்தத்தில் மற்ற நாடுகள் ரஷ்யா அல்லது வடகொரியா மீது தாக்குதல் நடத்தினால் பரஸ்பர உதவிகள் செய்வது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது என புதின் தெரிவித்துள்ளார். ஆனால், எந்த மாதிரியான உதவி என புதின் குறிப்பிடவில்லை.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது பாதுகாப்பு மற்றும் சர்வதேச பிரச்சினை ஆகியவை முக்கிய பங்கு வகித்தது என புதின் கூறியதாக ரஷ்யா மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

ராணுவ – தொழில்நுட்ப ஒத்துழைப்பு இந்த ஒப்பந்தத்தின் கீழ் வராது என புதின் புறம் தள்ளிவிடவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், சுகாதாரம், மருத்துவக் கல்வி, அறிவியல் தொடர்பான ஒத்துழைப்பு தொடர்பாகவும் ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் ரஷ்யா மீடியாக்கள் தெரிவித்துள்ளன.

இருவருடைய பேச்சுவார்த்தை குறித்து பேசியுள்ள கிம் ஜாங் உன், “இந்த ஒப்பந்தம் அமைதி மற்றும் பாதுகாப்பு சார்புடையது. இது ஒரு புதிய பன்முனை உலகத்தை உருவாக்குவதற்கான உந்துசக்தியாக மாறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 நியூஸ் : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் இந்தியா – ஆப்கானிஸ்தான் போட்டி வரை!

கிச்சன் கீர்த்தனா : முளைகட்டிய கொள்ளு காய்கறி சாலட்

இப்பவே கண்ணைக்கட்டுதே: அப்டேட் குமாரு

நாடாளுமன்றத்தில் சிஐஎஸ்எஃப் வீரர்களால் தடுத்து நிறுத்தம் : எம்.பி அப்துல்லா புகார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share