உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் இருவர் பலியாகி, முப்பது பேர் காயமடைந்துள்ளது மீண்டும் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது, இந்தப் போரில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில்,
உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டினிப்ரோ நகரத்தில் உள்ள மருத்துவமனையின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“ஒரு தீய அரசு மட்டுமே மருத்துவமனைக்கு எதிராக போராட முடியும்.
இதில் ராணுவ நோக்கம் இருக்க முடியாது, இது சுத்தமான பயங்கரவாதம்.
ரஷ்யா தனது சொந்த விருப்பத்தில் தீமையின் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது.
மேலும் அது இந்தப் பாதையை கைவிடாது. பயங்கரவாதத்தை தோற்கடிக்க வேண்டும்” என்று அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் முப்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருட்கள்: தகவல் அளிக்க எண்களை அறிவித்த சென்னை போலீஸ்!
கிச்சன் கீர்த்தனா: பிரியாணிக்குப் பிறகு சோடா குடிப்பவரா நீங்கள்?