கெர்சன் நகர மக்களை வெளியேற்ற ரஷ்ய ராணுவம் முயற்சி: உக்ரைன் குற்றச்சாட்டு

Published On:

| By Minnambalam

கெர்சன் நகரில் உள்ள பொது மக்களை வெளியேற்ற ரஷ்ய ராணுவம் முயற்சி செய்வதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா ஒன்பது மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இதில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் ரஷ்ய படைகள் வசம் சென்றுள்ளன.

இந்த நிலையில், உக்ரைன் தெற்கு பகுதி நகரமான கெர்சனுக்குள் புகுந்த ரஷ்ய ராணுவத்தினர், அங்குள்ள வீடுகளை ஆக்ரமித்து வருவதுடன் பொருட்களை கொள்ளை அடிப்பதாகவும், பொதுமக்களை காலி செய்யுமாறு உத்தரவிட்டு வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

அந்த நகரத்தில் மூன்று லட்சம் பேர் இருப்பதாக கருதப்படும் நிலையில், மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இது உக்ரைனின் நாசவேலை என்றும்  மின்சாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும்  ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் ரஷ்ய படையினர் 1.5 கிமீ மின் கம்பிகளை அகற்றிவிட்டதாகவும், உக்ரைன் படையினர் குற்றம் சாட்டியுள்ளனர். அந்தப் பகுதியை மீண்டும் உக்ரைன் கைப்பற்றும் வரை மின்சாரம் திரும்ப வராது என்றும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

சென்னை வெள்ளத்தை வென்றது எப்படி? மனம் திறக்கும் மாநகராட்சி ஆணையர்

தலைமுடி உதிர்வுக்காக இளைஞர் செய்த காரியம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share