உக்ரைனின் கெர்சன் நகரின் மீது ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தத் தொடங்கின. இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில், இரு தரப்பிலும் பெரிய அளவிலான உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் உக்ரைனின் உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் போரில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியது. அவ்வாறு கடந்த மார்ச் மாதம் ரஷ்ய ராணுவம் உக்ரைனின் கெர்சன் பகுதியைக் கைப்பற்றிய நிலையில், அதை உக்ரைன் படை கடந்த மாதம் போராடி மீட்டது.
இந்த நிலையில் தற்போது கெர்சன் நகரின் மீது ரஷ்ய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
கெர்சனில் உள்ள போர்க்கால மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் கடந்த சனிக்கிழமை கெர்சன் நகரில் நடந்த தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர், மேலும் 58 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-ராஜ்