உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஐ.நா பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது.
ஓர் ஆண்டை நிறைவு செய்துள்ள உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்து ஐ.நா பொதுச் சபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வாக்கெடுப்பு கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு 141 நாடுகள் ஆதரவாகவும், ரஷ்யா, பெலாரஸ், வட கொரியா, சிரியா உள்ளிட்ட 7 நாடுகள் எதிராகவும் இந்தியா, சீனா, ஈரான், தென் அமெரிக்கா போன்ற 32 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளன.
ரஷ்யா, உக்ரைன் போரில் அமைதியான பேச்சுவார்த்தையே ஒரே வழி என்று இந்தியா தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.

ஐநா வாக்கெடுப்பில் கலந்து கொண்ட இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி ருசிரா கம்போஜ் பேசுகையில், “மனித உயிர்களை விலையாகக் கொண்டு எந்தத் தீர்வும் எட்ட முடியாது என்பதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அமைதியான பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே போரை முடிவுக்கு கொண்டு வர முடியும். இன்றைய தீர்மானத்தில் கூறப்பட்ட நோக்கத்தை கவனத்தில் கொள்ளும்போது, நிலையான அமைதியைப் பெறுவதற்காக தீர்மானத்தை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
உக்ரைன் ரஷ்யா போரானது, போர் யுகமாக மாறிவிடக்கூடாது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியதை இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். போரால் விரோதம் மற்றும் வன்முறையை அதிகரிப்பதை யாரும் விரும்பவில்லை. மாறாக உரையாடல் வழியாக அமைதி பாதையை நோக்கி முன்னோக்கி செல்வதே சிறந்த வழியாகும்.
உக்ரைன் ரஷ்யா மோதலில் இந்தியாவின் அணுகுமுறை என்பது மக்களை மையமாகக் கொண்டே உள்ளது. இந்தியா உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்கியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
“எடப்பாடியால் அனைவரையும் காசு கொடுத்து வாங்க முடியுமா?”: தினகரன் கேள்வி!