உக்ரைனிலேயே சித்ரவதை முகாம்கள் அமைத்த ரஷ்யா!

இந்தியா

உக்ரைனுடனான போரின் தொடக்கத்தில் உக்ரைனில் உள்ள கெர்சன் நகரைக் கைப்பற்றிய ரஷ்யா, கடந்த எட்டு மாதங்களாக அந்த நகரை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து, சித்ரவதை முகாம்களை அமைத்து உக்ரைனியர்களைக் கொடுமைப்படுத்திய விவரம் வெளியாகியுள்ளது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போரானது, ஓராண்டை கடந்து நீண்டு கொண்டே செல்கிறது. இந்த நிலையில், போரின் தொடக்கத்தின்போது கெர்சன் நகரை ரஷ்யா கைப்பற்றியது.

கடந்த எட்டு மாதங்களாக அந்த நகரை தனது கட்டுப்பாட்டில் ரஷ்யா வைத்திருந்தது.

அப்போது, கெர்சன் நகரில் சித்ரவதை முகாம்களை அமைத்து, உக்ரைன் மற்றும் உக்ரைனுடன் தொடர்பில் உள்ளவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அந்த முகாம்களில் கைதிகளாக அடைத்து கொடுமைப்படுத்தியுள்ளது.

மேலும் தெருக்களில் நடந்து சென்ற பலர் ரஷ்ய வீரர்களால் பிடிபட்டுள்ளனர். அவர்களது மொபைல் போன்களில் உக்ரைனை சேர்ந்தவர்கள் என்பதற்கு ஆதரவான தடயங்கள் காணப்பட்டதும் கைது செய்யப்பட்டு, கைதிகளாக சித்ரவதை முகாம்களில் அடைப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம்  கெர்சன் நகரை உக்ரைன் ராணுவம் தன்வசப்படுத்தியது. அதன் பின்னரே இந்த சித்ரவதை முகாம்கள் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளன.

கெர்சனில் இதுபோன்ற 20 சித்ரவதை முகாம்கள் காணப்பட்டுள்ளன. ரஷ்ய படைகள் இவற்றை நிறுவி, நிர்வாகம் செய்து, முகாம்களை அமைக்க நிதியுதவியும் செய்திருப்பது இங்கிலாந்து வழக்கறிஞர் வெய்னே ஜோர்டாஷ் தலைமையிலான குழு சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

உக்ரைனில் சித்ரவதை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள் அடித்தும், மின்சாரம் பாய்ச்சி அதிர்ச்சி ஏற்படுத்தும் கொடுமைகளும் நடந்துள்ளன.

ரஷ்ய ஆதரவு கோஷங்கள், கவிதைகள் மற்றும் பாடல்ளைக் கற்று, உச்சரிக்க கட்டாயப்படுத்தியும் உள்ளனர்.

இந்த முகாம்களில் உள்ள 400 பேரை காணவில்லை. அவர்கள் உயிரிழந்து விட்டனரா அல்லது ரஷ்யாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டனரா என்பதும் தெளிவாக தெரியவில்லை என்று ஜோர்டாஷ் கூறியுள்ளார்.

ராஜ்

ஈரோடு கிழக்கு ஃபார்முலா ஒரு ஜனநாயக படுகொலை: எடப்பாடி அதிருப்தி

பருவம் தவறிய கனமழை…விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்த முதல்வர்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *