Russia says Ukraine attempt to kill Putin

அதிபர் மாளிகை தாக்குதல்: புதினை கொல்ல உக்ரைன் முயற்சி!

இந்தியா

ரஷ்ய  அதிபர் புதினை கொலை செய்ய உக்ரைன் முயற்சி செய்ததாகவும் அது முறியடிக்கப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் இன்று 435ஆவது நாளாக நீடித்து வருகிறது.

இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.

இந்த நிலையில், ரஷ்ய அதிபர் மாளிகையான கிரம்லினை குறிவைத்து நேற்று இரவு டிரோன் தாக்குதல் நடத்த முயற்சி செய்யப்பட்டதாகவும்,

அதிபர் புதினை கொலை செய்ய இரண்டு டிரோன் தாக்குதல் நடத்த முயற்சி செய்யப்பட்டதாகவும், அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் அதிபர் மாளிகையில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் இந்த டிரோன் தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என்றும் கூறியுள்ள ரஷ்யா, இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளது.

டிரோன் தாக்குதல் முயற்சி நடந்த நேரத்தில் புதின் அதிபர் மாளிகையில் இல்லை என்றும் அவர் மாஸ்கோ நகருக்கு வெளியே ஒடின்ஸ்வொஸ்கை மாவட்டத்தில் உள்ள தனது பங்களாவான நொவொ- ஒயொவாவில் தங்கியிருந்ததாகவும் இந்தத் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

ஐடி சோதனையில் ரூ.3.50 கோடி பறிமுதலா?: ஜி ஸ்கொயர் விளக்கம்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சடலங்களைப் பதப்படுத்தும் ரசாயனம்: 130 கிலோ மீன்கள் பறிமுதல்!

+1
0
+1
2
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *