உக்ரைனின் கீவ் நகரில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் புகலிடம் மூடப்பட்டு, தப்ப வழியின்றி தாய், மகள் உள்பட மூன்று பேர் பலியாகி உள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படையெடுப்பின் ஒரு பகுதியாக, வான்வழி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நேற்றிரவு ரஷ்யா நடத்திய 10-க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்களை உக்ரைன் வழியிலேயே தடுத்து அழித்தது.
ஆனால், அந்த ஏவுகணைகளில் இருந்து உடைந்து, கீழே விழுந்த பாகங்கள் தாக்கியதில் மக்கள் சிலர் உயிரிழந்து உள்ளனர். கட்டடங்களும் சேதமடைந்து உள்ளன என சி.என்.என் தெரிவித்துள்ளது.
இதில் 9 வயது சிறுமி, சிறுமியின் 34 வயது தாய் மற்றும் 33 வயது பெண் என மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஏவுகணை வீச்சில் இருந்து தப்பிப்பதற்காக அவர்கள் புகலிடம் ஒன்றில் நுழைய முயன்று உள்ளனர். எனினும், அது பூட்டப்பட்டு இருந்ததால் அவர்கள் தப்ப வழியின்றி, தாக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.
இந்த உயிரிழப்புகளைத் தொடர்ந்து பேசிய கீவ் நகர மேயர்,
“வான்வழி தாக்குதலுக்கான எச்சரிக்கையின்போது, இனி போலீஸார் இரவு ரோந்து பணி மேற்கொண்டு வெடிகுண்டு புகலிடங்கள் திறந்து இருக்கின்றன என உறுதி செய்வார்கள் என கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள உக்ரைனின் உள்துறை மந்திரி இஹோர் கிளிமெங்கோ, “போரின்போது, வெடிகுண்டு புகலிடங்கள் மூடியிருப்பது என்பது அலட்சியம் என்பது மட்டுமின்றி அது ஒரு குற்றச்செயல் எனக் கூறியுள்ளார்.
ராஜ்
வெற்றியும், தோல்வியும் தற்காலிகமானதே: பி.டி.ஆர்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!