Russia Launched 40 Missiles and Drones Overnight in Ukraine

உக்ரைன் மீது மீண்டும் உக்கிரம் காட்டும் ரஷ்யா!

உக்ரைன் மீது ரஷ்யா நேற்று ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 40-க்கும் மேற்பட்ட ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களை நிகழ்த்தி தனது உக்கிரத்தைக் காட்டியுள்ளது.

உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24-ம் தேதி முதல் ரஷ்யா போர் தொடுத்துள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளை நெருங்கியுள்ள நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு, திடீரென 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் ரஷ்யா ஈடுபட்டுள்ளதாக உக்ரைனில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து உக்ரேனிய விமானப்படை வெளியிட்டுள்ள தகவலில், “உக்ரைனின் கீவ் நகரம் அதிக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. ரஷ்ய ஏவுகணை தாக்குதலை இடைமறித்து அழிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவிலிருந்து இதுவரை மொத்தம் 40-க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 8 ஏவுகணைகள் அழிக்கப்பட்டுள்ளன.

கப்பல், பாலிஸ்டிக் ஏவுகணை, விமான எதிர்ப்பு ஏவுகணைகள், ட்ரோன்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் நவீன போர் முறைகள் மூலம் 20-க்கும் மேற்பட்ட தாக்குதல்கள் அதன் இலக்கை அடைய தவறின” என தெரிவித்துள்ளது.

வடகிழக்கு சுமி பிராந்தியத்தில் ஏவுகணைத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்ததாகவும் அங்கு 26 கட்டடங்கள் சேதமடைந்தன என உக்ரைனின் அரசு தெரிவித்துள்ளது. செர்னிகிவ் வடக்கு பிராந்தியத்திலும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அதன் ஆளுநர் வியாசெஸ்லாவ் சௌஸ் கூறியுள்ளார். பாதிப்பு நிலவரத்தின் முழு விவரங்களை அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை.

மத்திய போல்டாவா பிராந்தியத்தில் வெடிக்காத ஏவுகணை ஒன்று குடியிருப்பு கட்டடத்தின் மீது விழுந்தது என்று ஆளுநர் பிலிப் ப்ரோனின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதால், உக்ரைனின் அண்டை நாடான போலந்து, தனது வான் பாதுகாப்பை ஆய்வு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சண்டே ஸ்பெஷல்: டிரெண்ட் ஆகும் `புத்தா பௌல்’ டயட் – எல்லாருக்கும் ஏற்றதா?

என்னடா இங்க இருந்த பஸ் ஸ்டாண்ட காணோம்: அப்டேட் குமாரு

டிஜிட்டல்  திண்ணை: உதயநிதி துணை முதல்வர் வதந்தி தானா?

சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கோலாகலம்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts