ரஷ்யா – உக்ரைன் போரினால் பாதிக்கப்பட்டு ஏராளமான உக்ரைனியர்கள் ரஷ்யாவுக்குள் தஞ்சம் புகுந்து வரும் நிலையில் ரஷ்ய அரசுக்கு தெரியாமல், உக்ரைன் அகதிகளுக்கு ரஷ்யாவைச் சேர்ந்த பலர் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர்.
மாஸ்கோ, உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா, அந்த நாட்டின் மீது கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ரஷ்யாவை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது. இதனால், உக்ரைன் – ரஷ்யா போர் ஓர் ஆண்டைக் கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனிடையே, போருக்கு மத்தியிலும் ரஷ்ய அரசுக்கு தெரியாமல், உக்ரைன் அகதிகளுக்கு ரஷ்யாவைச் சேர்ந்த பலர் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர். ராணுவ தாக்குதல் காரணமாக ரஷ்யாவுக்கோ அல்லது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் பிராந்தியங்களுக்கோ, உக்ரைனின் பிற பகுதிகளிலிருந்து மக்கள் அகதிகளாக தினம் வந்திறங்குகின்றனர்.
தங்களது வீடு, உடைமைகள் மற்றும் செல்வம் அனைத்தையும் இழந்து அகதிகளாக எதிர்காலம் குறித்த அச்சத்துடன் வந்திறங்கும் உக்ரைனியர்களுக்கு ரஷ்ய மக்கள் தன்னார்வலர்களாக உதவி செய்து வருகின்றனர். 2022 டிசம்பர் மாத நிலவரப்படி, ரஷ்யாவில் உக்ரைன் நாட்டு அகதிகள் பத்து லட்சத்துக்கும் மேல் உள்ளனர் என ஐநா சபை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜ்