ராணுவத்துக்குத் தேவையான பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் இந்தியாவின் முன்னெடுப்புக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது.
ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் மற்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இடையிலான ஆலோசனை நேற்று (டிசம்பர் 27) நடைபெற்றது. இந்த ஆலோசனையில் ரஷ்யா – இந்தியா இடையிலான ஒத்துழைப்பு, வடக்கு – தெற்கு இடையிலான சர்வதேச போக்குவரத்து உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் ஜெய்சங்கர் – செர்கே லாவ்ரோவ் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய செர்கே லாவ்ரோவ், இரு நாடுகளுக்கு இடையிலான ராணுவம் மற்றும் தொழில்நுட்ப வாய்ப்புகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டோம். நவீன ஆயுத கூட்டு தயாரிப்பு குறித்தும் ஆலோசனை நடத்தினோம்.
ராணுவம் மற்றும் ராணுவம் சார்ந்த தொழில்நுட்ப திறனில் இந்தியாவின் திறன் மீது எங்களுக்கு மரியாதையும் நம்பிக்கையும் உள்ளது. உள்நாட்டு உற்பத்தி திட்டத்தின் கீழ் இந்தியாவின் ராணுவ உற்பத்திக்கு ஆதரவு அளிக்கிறோம். இது செயற்கைத்தனமின்றி உருவான நம்பிக்கை. இதில் இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கத் தயார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜயகாந்துக்கு கொரோனா: வென்டிலேட்டரில் சிகிச்சை!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!