1 டாலருக்கு ரூ.87 : மோடி காலத்தில் மட்டும் எவ்வளவு?

Published On:

| By Kumaresan M

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87.19 ரூபாயாக சரிந்தது.

முன்னதாக 86.62 ஆக இருந்தது. இந்த நிலையில் 55 பைசா சரிவை சந்தித்துள்ளது.. இந்த நிலையில், மெக்சிகோ, கனடா, சீனா நாடுகளுக்கு எதிரான அதிக வரி விரிவிதிப்பால் அமெரிக்க டாலரின் மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது. அதிகரித்து வரும் பண வீக்கம் , இறக்குமதி செலவு அதிகாரிப்பால் வரும் நாட்களில் இன்னும் பணத்தின் மதிப்பு குறைய வாய்ப்புள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தார். அப்போதிருந்து, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு அதிகரிக்கவே இல்லை.

கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி, ஆட்சிக்கு வந்ததும் 60 ரூபாயில் இருந்து 35 ரூபாய்க்கு கொண்டு வருவோம் என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் பேசி வந்ததும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2014 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி மோடி முதன் முதலாக பிரதமர் பதவியில் அமர்ந்தார். அப்போது, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 60.39 என இருந்தது. இப்போது, மோடியின் ஆட்சிக் காலத்தில் கிட்டத்தட்ட 27 ரூபாய் டாலருக்கு எதிராக சரிவை சந்தித்துள்ளது.

கனடா டாலருக்கு எதிரான பண மதிப்பும் குறைந்து வருகிறது. கடந்த ஜனவரி 5 ஆம் தேதி ஒரு கனடா டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 59.37 ஆக இருந்தது. பிப்ரவரி 4 ஆம் தேதி 60.23 சரிந்துள்ளது. ரூபாயின் மதிப்பு 1.44 சதவிகிதம் குறைந்து போயுள்ளது. கடந்த மாதத்தில் கனடாவில் இருந்து இறக்குமதி செலவு மற்றும் போக்குவரத்து செலவு அதிகரித்திருப்பதையே காட்டுகிறது.

சிங்கப்பூர் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. ஜனவரி 5 ஆம் தேதி 62.60 ஆக இருந்த பணத்தின் மதிப்பு பிப்ரவரி 4 ஆம் தேதி 64.14 ஆக சரிந்துள்ளது. இது சிங்கப்பூர் டாலருக்கு எதிராக இந்திய பணத்தின் மதிப்பு 2.46 சதவிகிதம் குறைந்துள்ளதை காட்டுகிறது.

ஐரோப்பிய யூரோவுக்கு எதிராகவும் ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளது. ஜனவரி மாதத்தில் யூரோவுக்கு எதிராக 88.43 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு பிப்ரவரி மாதத்தில் 89.88 ஆக சரிந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share