கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் 30-ம்தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. ஏராளமானோர் உயிரிழந்த நிலையில், பலர் காணாமல் போனார்கள். ஏராளமான குழந்தைகள் பெற்றோரை இழந்தனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் இறந்து போன சோகமும் நடந்தது. ராணுவத்தினர் கிட்டத்தட்ட 10 நாட்களாக மீட்புப்பணியில் ஈடுபட்டு சடலங்களை மீட்டனர்.
இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களும் மீட்கப்பட்டனர். பிரதமர் மோடியும் நேரடியாக வயநாட்டுக்கு வந்து நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். கேரள அரசும் நிலச்சரிவில் கடுமையாக பாதிக்கப்பட்ட சூரல் மலை, முண்டக்கை போன்ற பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில்,கேரள அரசு வயநாடு நிலச்சரிவின் போது ஆன செலவு தொகையை காட்டியுள்ளது.
அதில், ஒரு உடலை எரிக்க 75 ஆயிரம் செலவானதாக சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில், 359 உடல்களை எரிக்க 2.76 கோடி செலவாகியுள்ளது. தன்னார்வலர்கள் மற்றும் ராணுவத்தினருக்கு உணவு மற்றும் தண்ணீருக்காக 10 கோடி செலவாகியுள்ளது. தங்குமிடம் உள்ளிட்ட செலவு 15 கோடி ஆகியுள்ளது.
சூரல்மலை, முண்டக்கை பகுதியிலுள்ள மக்களை அப்புறப்படுத்த 12 கோடியும் பெய்லி பாலம் அமைக்க ஒரு கோடியும் செலவானதாக சொல்லப்பட்டுள்ளது.
டார்ச், ரெயின்கோட் வாங்க 2.98 கோடியும் மருத்துவ உபகரணங்கள் வாங்க 2 கோடியும் நிவாரண முகாம்கள் மற்றும் அங்கு உணவு செலவாக 8 கோடியும் ஆகியுள்ளது.
நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு உடைகள் வாங்க 11 கோடியும், நிவாரண முகாமில் மருத்துவ செலவாக 8 கோடியும் ஆனதாக சொல்லப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
தலைவலியாய் தொடர்ந்த பஞ்சாயத்து… நடிகர் சங்கம் உதவியுடன் முடித்த தனுஷ்
”உங்ககிட்ட வாய் மட்டும்தான் இருக்கிறது” பாக். வீரர்கள் மீது யூனிஸ்கான் பாய்ச்சல்!