2022-23ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் கழிவுப் பொருட்கள் விற்பனையில் கடந்த செப்டம்பர் மாதம் வரை இந்திய ரயில்வே ரூ.2,500 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது.
நாடு முழுவதும் ரயில் பாதை கட்டுமானப் பணிகளின்போது உருவாகும் இரும்புக்கழிவுகள் மற்றும் ரயில் தண்டவாளங்களுக்கு இடையே உள்ள மீண்டும் பயன்படுத்த முடியாத வார்ப்பு இரும்பு ஸ்லீப்பர்கள் ரயில்வே விதிகளின்படி அகற்றப்படுகின்றன.
இந்த இரும்புக்கழிவுகளை தொடர் நடவடிக்கை மூலம் ரயில்வே விற்பனை செய்து வருகிறது.
மின்னணு முறை ஏலம் மூலம் இந்த கழிவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த செயல்முறை மண்டல ரயில்வே மற்றும் ரயில்வே வாரியம் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
இந்த நிலையில் 2022-23ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் கழிவுப் பொருட்கள் விற்பனையில் கடந்த செப்டம்பர் மாதம் வரை இந்திய ரயில்வே ரூ.2,500 கோடி ரூபாய் ஈட்டியுள்ளது.
2021-22 நிதியாண்டின் இதே கால கட்டத்தில் ரூ.2,300 கோடி கழிவு பொருள் ஏலம் மூலம் வருவாய் ஈட்டப்பட்டது. அதை ஒப்பிடும்போது நடப்பாண்டு 28.91 சதவிகிதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ராஜ்