விந்தணுவால் மட்டும் மாதம் 5 லட்சம் லாபம்… எருமை மாடுனு யாரையும் திட்டாதீங்க!

இந்தியா

ராஜஸ்தானில் எருமை மாடு ஒன்றை 23 கோடிக்கு ஏலம் கேட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் ஆண்டுதோறும் சர்வதேச புஷ்கர் கண்காட்சி நடைபெறும். இதுவே இந்தியாவின் பெரிய கால்நடை கண்காட்சி ஆகும். இந்த கண்காட்சியில் கோடிக்கணக்கில் குதிரைகள் ஏலம் போகும். குதிரைகளை விட இந்த கண்காட்சியில் இருந்த அன்மோல் என்கிற முரா ரக  எருமை மாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஹரியானா மாநிலம் சிர்ஷா பகுதியை சேர்ந்த ஜகத் சிங் என்பவருக்கு இந்த எருமை சொந்தமானது.

சுமார் 13 அடி நீளம், 6 அடி அகலம்  1500 கிலோ எடை கொண்ட அன்மோல்  எருமை கண்காட்சியில் ஹீரோவாக வலம் வந்தது. 8 வயதாகும் அன்மோலுக்கு ஒரு நாள் உணவுக்கு மட்டும்  2000 ரூபாய் செலவு செய்யப்படுகிறது.

தினசரி உணவில் 5 லிட்டர் பால் 4 லிட்டர்  மாதுளை ஜூஸ், 30 வாழைப்பழங்கள், 20 முட்டைகள் மற்றும் கால் கிலோ பாதாம் தவிர பசுந்தீவனத்தை சாப்பிடும். மேலும் ஒரு நாளைக்கு  இரு முறை குளிப்பாட்டப்படும்  பின்னர், கடுகு மற்றும் பாதாம் எண்ணெய் மூலம் மசாஜ் செய்யப்படுகிறது.

அன்மோலின் விந்தணுவிற்கு சந்தையில் செம டிமாண்ட் இருக்கிறது. வாரத்திற்கு இரண்டு முறை விந்தணு எடுக்கப்படுகிறது. இதன் மூலம் மாதம்  ரூ.5 லட்சம் வரை லாபம் கிடைப்பதாக அதன் உரிமையாளர் ஜக்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த கண்காட்சியில்  அன்மோலை ரூ. 23 கோடி வரை ஏலம் கேட்ட போதும் அதை கொடுக்க மறுத்து விட்டார். அதாவது இரு ரோல்ஸ் ராய்ஸ் 10 மெர்சிடஸ் கார்களுக்கு இதன் விலை சமம். நொய்டாவில் 20 வீடுகளையும் இந்த விலையில் நாம் வங்கி விட முடியும்.

தான் பெற்ற பிள்ளை போல வளர்ப்பதால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அன்மோலை கொடுக்கப் போவதில்லை என்று ஜகத் சிங் கூறுகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

“காழ்ப்புணர்ச்சியோடு பெயரிடாத அறிக்கை” : ஆட்சியாளர்களுக்கு எடப்பாடி கண்டனம்!

கங்குவா படத்துக்கு அடுத்தடுத்து சிக்கல்… நவம்பர் 14 வெளியாகுமா?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0