விபத்தில் சிக்குபவர்களுக்கு 1.5 லட்சம் மதிப்புள்ள முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நாட்டில் பாதுகாப்பான சாலை போக்குவரத்து குறித்த கருத்தரங்கு ஜனவரி 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் நடந்தது. இந்த கருத்தரங்கில் பங்கேற்ற மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது,
“மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் விபத்தில் சிக்குபவர்களுக்கு 7 நாட்களுக்கு 1.5 லட்சம் மதிப்புள்ள இலவச சிகிச்சை முற்றிலும் வழங்கப்படும். எந்த விதமான சாலை, எந்த விதமான வாகனங்களில் விபத்தில் சிக்கினாலும் இந்த திட்டம் பொருந்தும். மாநில சுகாதாரத்துறை, மருத்துவமனைகள், போலீசாருடன் இணைந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
விபத்தில் சிக்குபவர்களுக்கு கோல்டன் ஹவர் என்று அழைக்கப்படும் நேரத்தில் தக்க சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் 22 லட்சம் டிரைவர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. நாட்டின் பல பகுதிகளில் மத்திய அரசு சார்பில் டிரைவிங் பயிற்சி மையம் தொடங்கவும் திட்டம் உள்ளது” என்று தெரிவித்தார்.
முதல் கட்டமாக மார்ச் 14 ஆம் தேதி இந்த திட்டம் சண்டிகர் நகரில் அமலுக்கு வருகிறது. தொடர்ந்து, இன்னும் 6 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்படும். அடுத்தடுத்து அனைத்து மாநிலங்களுக்கும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
250 கி.மீ வேகம்… விபத்தில் அஜித்குமார் சிறு காயம் இல்லாமல் தப்பியது எப்படி?
ஸ்டாலின் சொன்ன பதில் ‘சார்’… அதிமுகவினரின் ரியாக்ஷன்! என்ன நடந்தது சட்டமன்றத்தில்?