உத்திரப்பிரதேசத்தில் வங்கி ஒன்றில் நுழைந்த கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி இருக்கிறது.
உத்திரபிரதேச மாநிலம் ஜான்பூரில் கடந்த 29ம் தேதி அன்று ஜலால்பூர்-மடியாஹுன் சாலையில் அமைந்துள்ள யூனியன் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்குள் 2 பேர் முகமூடியுடன் நுழைந்துள்ளனர்.
அவர்கள் பணியில் இருந்த ஊழியரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் நடைபெற்று 4 நாட்கள் ஆன பின்னரும் குற்றவாளிகளை பிடிக்க முடியாததால் போலீசார் சிசிடிவி வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க தொடங்கிய போது, பணியில் இருந்த ஊழியர் கொள்ளையர்கள் காலில் விழுந்து கொள்ளையடிக்க வேண்டாம் என கெஞ்சுகிறார்.
ஆனால் 48,800 ரூபாயை மட்டும் கொள்ளையடித்த அவர்கள், வெளியே முகமூடி அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் தயாராக இருந்த மற்றொரு நபருடன் புறப்பட்டு செல்கின்றனர்.
இந்தக் காட்சிகளை வெளியிட்டுள்ள போலீசார் குற்றவாளிகளை அடையாளம் தெரிந்தால் தகவல் கொடுக்குபடி தெரிவித்துள்ளனர்.
கலை.ரா
துணிவுக்கு முன்பே வெளியாகும் வாரிசு!
திமுக கவுன்சிலர் கடத்தியது கோகைன் போதைப்பொருளா? – கடலோர பாதுகாப்பு குழுமம் விளக்கம்