ஜப்பான் நாட்டின் நாகோ நகரில் ஓடும் நதி திடீரென்று அடர் சிவப்பு நிறமாக மாறிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பேசுபொருளானது. இந்த திடீர் சம்பவத்தால் அந்தப் பகுதியிலிருக்கும் மக்கள் பீதியடைந்தனர்.
விசாரணையில் அந்தப் பகுதியில் இயங்கிவரும் பீர் தொழிற்சாலையிலிருந்து கசிந்த ரசாயனப் பொருள் நதியில் கலந்ததால், நதி நிறம் மாறியது என்பது தெரியவந்தது. தற்போது அந்த நிறுவனம் மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஓரியன் பிரிவரிஸ் (Orion Breweries) எனும் பீர் தொழிற்சாலையிலுள்ள குளிரூட்டும் அமைப்பு ஒன்றில் கசிவு ஏற்பட்டதன் விளைவாக இவ்வாறு நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்ட ஓரியன் பிரிவரிஸ் நிறுவனம், “இத்தகைய பெரிய சிக்கலை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு தெரிவித்துக் கொள்கிறோம். தொழிற்சாலையிலிருந்து கசிந்த ரசாயனம் நதியில் கலந்ததால் நிறம் மாறியிருக்கும்.
இந்த ரசாயனம், எங்கள் தொழிற்சாலையில் இயங்கும் குளிரூட்டும் அமைப்புகளிலிருக்கும் நீரில் கலக்கப்பட்டிருக்கிறது. இது எப்படியோ கசிந்து மழைநீர் கால்வாய் மூலமாக நதியில் கலந்ததால் நிறம் மாறியிருக்கும்” என்று தெரிவித்திருக்கிறது.
மேலும் இதுபற்றி பேசியுள்ள ஓரியன் பிரிவரிஸ் தலைவர் ஹஜிமே முரானோ, “கசிவு எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். மீண்டும் இதுபோன்ற சம்பவம் நிகழாமலிருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
ராஜ்
தேசிய புள்ளியியல் தினமும் புள்ளியியலின் முக்கியத்துவமும்!
ஆதி திராவிடர் நல வாரியம்: சம்பளம் வழங்காத தாசில்தாருக்கு சிறை!