காற்று மாசால் நீரிழிவு நோய் அதிகரிக்கும் அபாயம்!

இந்தியா

காற்று மாசுக்கும், டைப் 2 நீரிழிவு நோய் அதிகரிப்புக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

சமீப நாட்களாக டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்திருக்கிறது. இதனால் டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

டெல்லி மட்டுமின்றி இந்தியாவின் பல நகரங்களும் தற்போது காற்று மாசுப்பாடால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் சென்னையும் அடங்கும்.

இந்நிலையில் டெல்லி மற்றும் சென்னையில் வசிப்பவர்களில் 12,000 பேரிடம் ஏழு ஆண்டுகாலம் நடத்தப்பட்ட அய்வறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பிஎம்ஜே எனப்படும் பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் இந்த ஆய்வை நடத்தியுள்ளது.

இதில், மாசடைந்த காற்றை சுவாசிப்பதன் மூலம் டைப் 2 நீரிழிவு நோய் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘டெல்லி மற்றும் சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில், அதிக அளவு PM2.5 நுண்துகள்கள் கொண்ட காற்றை உள்ளிழுப்பதன் மூலம் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

நமது முடியை விட 30 மடங்கு மெல்லிய PM2.5 துகள்கள் ரத்த ஓட்டத்தில் நுழைந்து பல சுவாச மற்றும் இருதய நோய்களை ஏற்படுத்தும்.

இந்தியாவில் 2010ஆம் ஆண்டு முதல்  நாள்பட்ட நோய்கள் பற்றிய தொடர்ச்சியான ஆய்வின் ஒரு பகுதியாக இந்த ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.

சராசரியாக டெல்லியில் காற்றில் கலந்துள்ள PM2.5 நுண்துகள்கள் அளவு 82-100 மைக்ரோகிராமும்/கனமீட்டர், சென்னையில் 30-40 மைக்ரோகிராமும்/கனமீட்டர் உள்ளது. இது உலக சுகாதார அமைப்பின் காற்றின் தரநிலையை (5 மைக்ரோகிராம்/கனமீட்டர்) விட பலமடங்கு அதிகமாகும்.

இந்தியாவில் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் உள்ளிட்ட தொற்று அல்லாத நோய் பாதிப்புகள் அதிகமாக இருக்கிறது.

இந்திய மக்கள் தொகையில் 11.4% அதாவது 10.1 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 13.6 கோடி மக்கள் நீரிழிவு நோய் பாதிப்புக்கு முந்தையநிலை, அதாவது ஒரு தீவிரமான சுகாதார நிலையில் இருக்கின்றனர் என்று ஜூன் மாதம் வெளியான லான்செட் ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தநிலையில் சராசரியாக PM 2.5 நுண்துகள்கள் என்றளவில் காற்று மாசுபாட்டுக்கு உள்ளாவது டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. நீரிழிவு நோய்க்கான ஆபத்து 22% அதிகரிக்கிறது” என்று பிஎம்ஜே ஆய்வறிக்கை கூறுகிறது.

காற்று மாசின் நுண்ணிய துகள்கள் நுரையீரல் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைத் தூண்டுவதன் மூலம் வாஸ்குலர் இன்சுலின் எதிர்ப்பு திறன் தூண்டப்படுகிறது. இதன் காரணமாக சர்க்கரை நோயின் அளவு அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஐஸ்வர்யா ராஜேஷ் – யோகி பாபு கூட்டணியில் புதிய படம்!

மிக கனமழை: தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு அலர்ட்!

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0