கோடைக்காலம் நெருங்கும் நிலையில் சோப்பு விலையை உயர்த்த முன்னணி சோப்பு தயாரிப்பு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. Rising Soap and detergent Prices
வெப்ப மண்டல பகுதியில் நாம் வசிப்பதால் அதிக வெப்பம், சுற்றுப்புற மாசு என தினம் பல இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில் உடலின் வியர்வை, அழுக்கு, தூசு என நாம் சோப்பை பயன்படுத்த வேண்டியுள்ளது.
சென்ற தலைமுறையில் சோப்பு என்பது சில வகைகளில் மட்டும் குளிக்க, துணிகளுக்கு போட என இருந்தது. ஆனால், தற்போது குளியல் சோப்பு என்பது பல கலர், வடிவம், வாசனை என பல விதங்களில் வருகின்றன. மூலிகை சோப்பு, புத்துணர்வு கொடுக்கும் சோப்பு, நோய்களைத் தீர்க்க,தோலை ஸ்பெஷலாக பராமரிக்க என விதம் விதமாக நம்மை ஆக்கிரமித்துள்ளன.
இந்த நிலையில், இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளில் பாமாயில் தயாரிப்பு சரிவைச் சந்தித்துள்ள நிலையில், பாமாயில் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றம் கண்டுள்ளது. இதன் எதிரொலியாக சோப்பு தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சோப்புகளின் விலையை உயர்த்த ஹிந்துஸ்தான் யூனிலெவர் (டவ் சோப்பு), கோத்ரேஜ் கன்ஸியூமர் (சிந்தால்) உள்ளிட்ட பல முன்னணி சோப்பு தயாரிப்பு நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.
எனினும், விலையேற்றம் உடனடியாக அமலுக்கு வராது எனவும் நிறுவனங்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. Rising Soap and detergent Prices