குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணியத்துடன் இறக்கும் வகையில் right to die பாலிசி கர்நாடகத்தில் அமல்படுத்தப்படவுள்ளது.
நோயாளிகள் கண்ணியத்துடன் இறக்கும் வகையில் நடவடிக்கைகள் தேவை என்று சமீபத்தில் உச்சநீதிமன்றம் சில நடைமுறைகளை வெளியிட்டிருந்தது. அதன்படி,நோயில் இருந்து மீளவே முடியாதவர்களை கண்ணியத்துடன் இறக்க கர்நாடக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது மீளவே முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் வேதனையை அனுபவித்தபடி இருப்பார்கள்.
அத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணியத்துடன் மரணிக்க கர்நாடகத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இத்தகைய நோயாளிகளின் குடும்பத்தார் கேட்டுக் கொண்டால் கண்ணியத்துடன் இறக்க மருத்துவர்களால் வழி வகை செய்யப்படும்.
அதன்படி, இரண்டு குழுக்கள் நோயாளியின் நிலையை ஆராயும். முதலில் 3 டாக்டர்கள் கொண்ட குழு நோயாளியின் நிலையை ஆராய்ந்து அறிக்கை கொடுக்கும்.
அடுத்ததாக அரசு டாக்டர் அடங்கிய 3 பேர் கொண்ட குழு நோயாளியின் நிலையை ஆராய்ந்து நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்கும். நீதிமன்றம் அனுமதி அளித்ததும், மருத்துவர்கள் முன்னிலையில் நோயாளிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் லைஃப் சப்போர்ட் கருவிகள் அகற்றப்படும். நோயாளியின் உடலில் இருந்து படிப்படியாக உயிர் நீங்கும்.