10 சதவிகித இட ஒதுக்கீடு தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 23) மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு முறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது
இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த நவம்பர் 7ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
இதில், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி, பி.பர்திவாலா ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசன அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என்று தீர்ப்பு வழங்கினர்.
நீதிபதிகள் யுயு லலித், ரவீந்திர பட் ஆகியோர் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பு வழங்கினர்
இந்த தீர்ப்புக்கு வரவேற்பும், எதிர்ப்பும் ஒரு சேர கிளம்பியது.
இந்நிலையில் இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று (நவம்பர் 23) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி மற்றும் பி. பர்திவாலா ஆகியோர் வழங்கிய, 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்புக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஜெயா தாக்கூர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முடிவெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
சபரீசனை சந்தித்த காயத்ரி : சஸ்பெண்டுக்கு இது தான் காரணமா?
கனிமொழியிடம் இருந்து மகளிரணி பறிக்கப்பட்டதா?