அரசாங்க பரிவர்த்தனைகளும் கையாளும் அனைத்து ஏஜென்சி வங்கிகளுக்கு மார்ச் 31, 2024 வேலை நாளாக இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
நிதியாண்டின் கடைசி நாளான மார்ச் 31ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் வேலைநாளாக செயல்படும். எனவே அன்றைய தினம் வங்கிகள் விடுமுறை அளிக்கப்படாது.
ஆனால் இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகள் செயல்படுமா என்ற பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், 2023-24 நிதியாண்டில் நடைபெற்ற அனைத்து அரசாங்க பரிவர்த்தனைகளுக்கும் ரசீது அல்லது பணபரிவர்த்தனைகள் மூலம் கணக்கு வைப்பதற்காக மார்ச் 31, 2024 அன்று அரசாங்க பரிவர்த்தனைகளை கையாளும் அனைத்து ஏஜென்சி வங்கி கிளைகளையும் திறக்கும்படி இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அந்த அறிவிப்பின்படி, “இந்திய அரசு, மார்ச் 31, 2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பரிவர்த்தனைகளுக்காக அரசாங்க ரசீதுகள் மற்றும் பணபரிவர்த்தனைகளை கையாளும் வங்கிகளின் அனைத்து கிளைகளையும் திறந்து வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. அதனடிப்படையில், ஏஜென்சி வங்கிகள் அரசு வணிகம் தொடர்பான தங்களது அனைத்து கிளைகளையும் மார்ச் 31, 2024 அன்று திறந்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, நிலுவையில் உள்ள வரி தொடர்பான பணிகளைக் கருத்தில் கொண்டு 2024 மார்ச் 29 முதல் மார்ச் 31 வரையிலான நீண்ட வார விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
“நிலுவையில் உள்ள துறை சார்ந்த பணிகளை முடிப்பதற்கு வசதியாக, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து வருமான வரி அலுவலகங்களும் 2024 மார்ச் 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் திறந்திருக்கும்” என்று வருமான வரித்துறை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி
ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்… களைகட்டிய திருவாரூர் ஆழித்தேரோட்டம்!