மக்களிடம் புழக்கத்தில் இருந்த, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 98. 12 சதவீதம் வங்கிக்கு திரும்பிவிட்டன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு பணமதிப்பழிப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அப்போது, 2023ம் ஆண்டு மே 19ம் தேதி வரை ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. பணமதிப்பழிப்பு அறிவித்த போது, புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு 3.56 லட்சம் கோடி என்று கணக்கிடப்பட்டிருந்தது.
அந்த வகையில், கடந்த டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி 2000 ரூபாய் நோட்டுகள் 98.12 சதவீதம் ரிசர்வ் வங்கிக்கு திரும்பியுள்ளன. ரூ. 6,691 கோடி மதிப்புள்ள பணம் வங்கிக்கு திரும்பாமல் உள்ளது .
இந்த நிலையில், 2000 நோட்டுகள் வைத்திருப்பவர்கள் தபால் வழியாக அனுப்பி தங்கள் வங்கிக்கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம். அல்லது ரிசர்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் நேரில் சென்று மக்கள் தங்கள் வங்கிக்கணக்கில் பணத்தை வரவு வைத்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
“ஆண்ட பரம்பரை” : அமைச்சர் மூர்த்தியின் பேச்சு வைரல்!
போலீஸ் அனுமதி மறுப்பு : தடையை மீறி சவுமியா அன்புமணி போராட்டம்?