புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுக்கள் திரும்ப பெறப்படும் என்று இந்திய ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “2016-ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது அவசர கதியில் ரூ.2000 நோட்டுக்கள் கொண்டுவரப்பட்டது.
தற்போது ரூ.2000 நோட்டுக்களுக்கான தேவை குறைந்து விட்டது. இதனால் ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுகிறது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள நோட்டுக்கள் திரும்பப்பெறப்படும்.
மே 23-ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் நாள் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வரை ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
கொளுத்தும் வெயில் : அரசு துறைகளுக்கு பறந்த உத்தரவு!