இடஒதுக்கீடு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

இந்தியா

இடஒதுக்கீடு முறையை ரத்து செய்யக் கோரி, சட்டக் கல்லூரி மாணவி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நாட்டில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு முறையை ரத்து செய்யக்கோரி ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஷிவானி பன்கர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த பொதுநல மனு, நீதிபதி சந்திரசூட் தலைமை அமர்வு முன்பு இன்று (டிசம்பர் 13) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், ’இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டுமா? இது எந்த மாதிரியான பொதுநல மனு’ என கேள்வியெழுப்பினர்.

அப்போது இடஒதுக்கீடு முறை சமத்துவத்திற்கு எதிராக இருப்பது மட்டுமல்லாமல் ஜாதிய முறையை விட்டுச்செல்கிறது என மனுவில் கூறப்பட்டு இருந்தது.

அப்போது பேசிய நீதிபதிகள், ’பொதுநல மனுவை திரும்பப் பெறவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர்.

அதோடு விளம்பர நோக்கில் சட்டக்கல்லூரி மாணவி இதுபோன்ற பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளதாக கூறினார்.

அப்போது மாணவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுவை திரும்ப பெற அனுமதி அளிக்குமாறு கேட்டார். அப்போது அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், இடஒதுக்கீடு மனுவை திரும்ப பெற்று மனுவை தள்ளுபடி செய்தது.

ஜெ.பிரகாஷ்

அமைச்சர் காந்தி இலாகா பறிப்பு: ராஜ கண்ணப்பனுக்கு மேலும் ஒரு பொறுப்பு!

முல்லை பெரியாறு வழக்கு: அவசரமாய் விசாரிக்க மறுப்பு!

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.