"Repo rate unchanged for 10th time" : RBI

”ரெப்போ வட்டி விகிதத்தில் 10வது முறையாக மாற்றமில்லை” : ரிசர்வ் வங்கி

இந்தியா

ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இன்றி 6.5% ஆகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று (அக்டோபர் 9) அறிவித்துள்ளார்.

ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும். இரு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூடி, ரெப்போ விகிதம் தொடர்பாக முடிவுகள் எடுப்பது வழக்கம்.

இம்மாத தொடக்கத்தில் மத்திய அரசு நாணயக் கொள்கைக் குழுவை மறுசீரமைத்தது. புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று வெளி உறுப்பினர்களுடன் மறுசீரமைக்கப்பட்ட குழு கடந்த 7ஆம் தேதி தனது முதல் கூட்டத்தை நடத்தியது.

அதனைத்தொடர்ந்து நாணயக் கொள்கைக் குழுவின் தலைவரும் ரிசர்வ் வங்கி ஆளுநருமான சக்திகாந்த தாஸ் மூன்று நாள் கூட்டத்தின் முடிவுகளை இன்று அறிவித்தார்.

அதன்படி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இன்றி 6.5% ஆகவே தொடரும் என அறிவித்துள்ளார். இதன்மூலம் 2023 பிப்ரவரி முதல் தொடர்ந்து 10-வது முறையாக ரெப்போ விகிதத்தில் மாற்றம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர், “பொருளாதாரம் மற்றும் நிதிச் சூழல்களைக் கணக்கில் கொண்டே ரெப்போ வட்டி விகிதத்தை அதே 6.5% என்றளவில் தொடர்கிறது. இதேபோல் அமெரிக்க பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற சூழல், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் ஆகியனவற்றையும் இந்தியா தொடர்ந்து கவனித்து வருகிறது” என தெரிவித்தார்.

மேலும், ”இந்தியாவின் நுகர்வு மற்றும் முதலீட்டு தேவை வேகத்தை அதிகரித்து வருகிறது. 2024-25 ஆம் ஆண்டிற்கான உண்மையான ஜிடிபி வளர்ச்சி 7.2%. வரும் 2025-26 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7.3% ஆக இருக்கும்” என சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

வட்டி விகிதம் மாற்றப்படாதது ஏன்?

ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படாததற்கு நாட்டின் உணவுப் பணவீக்கமும் அதன் நீட்சியாக ஒட்டுமொத்த பணவீக்கமும் தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் நிர்ணயித்த வரம்புக்குள் வராதது முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

பொதுவாக ரெப்போ விகிதம் உயரும்போது வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும். அதேவேளையில் குறையாமல் இருப்பதும் சாமானிய மக்களுக்கு சுமைதான் என்றும், டிசம்பரில் மட்டும் சில தளர்வுகளுக்கு வாய்ப்பு இருக்கலாம் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

திடீரென வீழ்ந்த தங்கம் விலை… வாங்குவதற்குச் சரியான வாய்ப்பு!

பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம், தக்காளி விற்பனை!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0