“ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை” – ரிசர்வ் வங்கி

Published On:

| By Selvam

repo rate rbi 2023

குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பணக்கொள்கையை முடிவு செய்யும் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு இரு மாதங்களுக்கு ஒருமுறை கூடி பணக்கொள்கையை புதுப்பிக்கும் வழிமுறைகள் குறித்து விவாதிக்கும்.

இந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் குறித்து முடிவெடுக்கப்படும். ரெப்போ வட்டி விகிதம் என்பது ரிசர்வ் வங்கியிடம் வங்கிகள் வாங்கும் கடனுக்கான வட்டியாகும். நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரெப்போ வட்டி வகிதம் இரு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றம் செய்யப்படும். ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தினால் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வீடு, வாகனம், தனி நபர் கடன் வட்டி விகிதம் அதிகரிக்கும்.

அதன்படி இரு மாத பணக்கொள்கையை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் இன்று அறிவித்தார். அதன்படி ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக மாற்றாமல் 6.5 சதவிகிதமாக வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். 2023- 24-ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஜிடிபி வளர்ச்சி 6.5 சதவிகிதமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

செல்வம்

சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

பொன்முடி சொத்துக்குவிப்பு வழக்கு: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share