Repo Rate: ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இன்றி 6.5 சதவிகிதத்திலேயே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த 5ஆம் தேதி தொடங்கிய இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) நிதிக் கொள்கைக் குழு (MPC) கூட்டம் இன்று வரை நடைபெறுகிறது. இந்த நேரத்தில் மக்களவை தேர்தல் முடிவுகளும் வெளியானதை அடுத்து, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படலாம் என கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து 8வது மாதமாக ரெப்போ ரேட் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில், தனிநபர் வீட்டுக்கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமுமின்றி பழைய நிலையே நீடிக்கும்.
இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், “நிதிக் கொள்கைக் குழு 4:2 பெரும்பான்மையுடன் பாலிசி ரெப்போ விகிதத்தை 6.5% ஆக தொடர முடிவு செய்தது. இதன் விளைவாக, நிலையான வைப்புத்தொகை வசதி (SDF) விகிதம் 6.25% ஆகவும், விளிம்பு நிலை வசதி (MSF) விகிதம் மற்றும் வங்கி விகிதம் 6.75% ஆக உள்ளது.
நடப்பு நிதியாண்டான 2024-2025ல் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி, மொத்தமாக 7.2 சதவிகிதமாக இருக்கும்” என ஆர்பிஐ கணித்துள்ளதாக சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி முதல் காலாண்டில் 7.3 சதவிகிதம் ஆகவும், இரண்டாவது காலாண்டில் 7.2 சதவிகிதம் ஆகவும், மூன்றாவது காலாண்டில் 7.3 சதவிகிதம் ஆகவும் மற்றும் நான்காவது காலாண்டில் 7.2 சதவிகிதம் ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Gold Rate: நாளை முகூர்த்தம்.. இன்று புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி விலை!
Share Market : பதவி ஏற்கும் புதிய அரசு… பங்குச் சந்தை உச்சம் தொடுமா? வீழுமா?