வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (மே 25) இரவு புயலாக வலுப்பெற்றது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் மே 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் இன்று இரவு புயலாக வலுப்பெற்றது.
இந்த ரீமால் புயல் நாளை வங்கதேசம் ஒட்டியுள்ள சாகர் தீவு அருகே மணிக்கு 135 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கும்.
தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்:
இந்த ரீமால் புயலால், தமிழகத்தில் ஏற்கனவே நிலவி வரும் குளிர் தணிந்து வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்த புயலால், தமிழகத்தில் பெய்து வந்த மழையின் அளவு படிப்படியாக குறையும். மேலும், வடமாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் உள்நுழையும் கடல் காற்றை ரீமால் புயல் இழுத்து செல்வதன் காரணமாக தமிழகத்தில் சென்னை உட்பட வட மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போக்குவரத்து Vs போலீஸ் பிரச்சனைக்கு தீர்வு எப்போது? எடப்பாடி காட்டம்!
“அம்மா சொன்ன அந்த வார்த்தை” – ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் எமோஷனல்!