டிரம்ப் புதிய உத்தரவு… அதானிக்கு சாதகமா?

Published On:

| By Kumaresan M

அமெரிக்காவில் சூரிய சக்தி மின்சார ஒப்பந்தங்களைப் பெற கடந்த 2020 – 2024 காலகட்டத்தில் இந்திய அரசு அதிகாரிகளுக்கு, ரூ.2,100 கோடியை பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி நிறுவனம் லஞ்சம் கொடுத்தாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

லஞ்சம் கொடுத்ததை மறைத்து மேற்கண்ட திட்டங்களுக்காக அமெரிக்காவில் முதலீடு திரட்டியதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, அதானி மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அமெரிக்காவில் 1977-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டினர் ஊழல் தடுப்பு நடவடிக்கை சட்டத்தின் அடிப்படையில்தான் அதானி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் இந்த சட்டத்தை நிறுத்தி வைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

6 மாதங்கள் இந்த சட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மறு ஆய்வு செய்யவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

அதுவரை புதிய விசாரணை எதுவும் இந்த சட்டத்தின் கீழ் நடைபெறாது. தேவையான வழக்குகளுக்கு விதி விலக்கு அளிக்க அட்டெர்னி ஜெனரல் முடிவு செய்து கொள்ளலாம். 6 மாதங்கள் கழித்து புதிய வழிகாட்டு நெறிமுறை அடிப்படையில்தான் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் டிரம்பின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

எனினும், 6 மாதம் கழித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அடிப்படையில் விசாரணை இன்னும் தீவிரமடைந்தால் அதானி தப்புவது கடினம் என்றே கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share