ரிசர்வ் வங்கியின் 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்ப பெறுவதற்கான அறிவிப்பை தொடர்ந்து மீண்டும் 1,000 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வருவது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த் தாஸ் விளக்கமளித்துள்ளார்.
இப்போதைய சூழலில் 1,000 ரூபாய் நோட்டுக்கான தேவை இருக்கவே செய்கிறது. காரணம், பணவீக்கம்தான்.
ஆண்டுதோறும் 7 சதவிகிதம் பணவீக்கம் இருக்கிறது என்று கணக்கில்கொண்டால், 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இப்போது சுமார் 50 சதவிகிதம் அளவுக்கு பணத்தின் மதிப்பு குறைந்துள்ளது.
அதன்படி, அப்போதைய 500 ரூபாயின் மதிப்பு இப்போது 250 ரூபாயாகக் குறைந்துவிட்டது. அதாவது 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டால், நாம் பயன்படுத்தும் 500 ரூபாயின் மதிப்பு வெறும் 250 ரூபாய்தான்.
இதனால், நாம் அதிக அளவில் ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது.
பணவீக்கம் எதிரொலியாக, 5 பைசா, 10 பைசா, 20 பைசா நாணயங்கள் எப்படி வழக்கில் இருந்து நீக்கப்பட்டு 10, 20 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் வந்துவிட்டன.
அதேபோல், அதிக மதிப்புகொண்ட ரூபாய் நோட்டுகள், அதாவது 1,000 ரூபாய் நோட்டுகள் இன்றைய தேவையாகவே இருக்கிறது.
ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கத்தில் விடப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று பலர் கூறிவரும் நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்பில் ‘ஆர்பிஐ 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்ப பெறும் வேளையில் மீண்டும் பழைய படி 1,000 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வருகிறதா?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த சக்திகாந்த தாஸ், “இது முற்றிலும் ‘ஊக’ அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகள், ரிசரவ் வங்கிக்கு 1,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யும் திட்டம் இப்போது ஏதுமில்லை” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
விமர்சனம் : மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன்!
2000 ரூபாய் வாங்குவோம்.. வாங்கமாட்டோம்..வியாபாரிகள் பதட்ட பேட்டி!
சட்டவிரோத பார்கள் – அமைச்சருக்கு ரூ.2000 கோடி வருமானம்: எடப்பாடி குற்றச்சாட்டு!