நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. registers first live-in relationship
பொது சிவில் சட்ட விதிகளை அறிமுகம் செய்து வைக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான பிரத்யேக இணையதளமும் கொண்டு வரப்பட்டுள்ளது.
பொது சிவில் சட்டம் பெண்களுக்கு எதிரான சமத்துவமற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது.
அனைத்து மதத்தினருக்கும் ஒரே சட்டம் பொருந்தும் என்பதால், பலதார மணம் ஒழிக்கப்படுகிறது. பெண்களுக்கு சொத்தில் சம உரிமைக்கும் வழி வகுத்துள்ளது.
அதோடு, திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்பவர்களும் தங்களை பதிவு செய்ய பொது சிவில் சட்டம் வலியுறுத்தியுள்ளது. இதன் காரணமாக உத்தராகண்ட்டில் லைவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களும் தங்களை பதிவு செய்து கொள்ள முன் வந்துள்ளனர்.
இந்த நிலையில், லைவ் இன் ரிலேஷன்ஷிப்பை பதிவு செய்ய 6 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில், கடந்த 4 ஆம் தேதி ஒரு விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது. மீதியுள்ள ஐந்தும் பரிசீலைனையில் உள்ளன.
சிறை தண்டனை, அபராதம்! registers first live-in relationship
லைவ் இன் ரிலேஷன்ஷிப்பில் உள்ளவர்கள் பற்றிய ரிக்கார்டுகளை பராமரிக்கவே பதிவு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
லைவ் இன் ரிலேஷன்ஷிப்பில் உள்ளவர்கள் அநாகரீகமாக செயல்பட்டால் அக்கம் பக்கத்தினர் எப்போது வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம். திருமணம் புரியாமல் இணைந்து வாழ்பவர்கள் பற்றிய விவரங்கள் அவர்கள் வசிக்கும் வீடு அமைந்திருக்கும் காவல் நிலையத்துக்கும் அனுப்பப்பட்டிருக்கும்.
லைவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்பவர்கள் பதிவு செய்யவில்லை என்றால் 6 மாத சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று பொது சிவில் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. registers first live-in relationship