உக்ரைன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயார்: புதின்

இந்தியா

உக்ரைன் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயாராக உள்ளதாக ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளது, உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர்,  இரண்டு ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. இதில், உக்ரைனின் நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்துகொண்டு ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “அணு ஆயுத போரைத் தூண்டும் வகையில் எந்த ஒரு செயலிலும் அமெரிக்கா ஈடுபடாது என்று நம்புகிறோம். ஆனாலும் நாங்கள் அதற்கு தயாராகவே உள்ளோம்” என்றார்.

அப்போது அவரிடம் உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது குறித்துத் சிந்தித்தது உண்டா என்று கேள்வி கேட்கப்பட்ட து. அதற்கு புதின், “அதற்கான அவசியம் இருந்ததில்லை. உக்ரைனில் மாஸ்கோ அதன் இலக்கை அடையும். பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம்” என்றார்.

இவ்வாறு அணு ஆயுதங்கள் பயன்படுத்துவது தொடர்பாக புதின் எச்சரிக்கை விடுத்துள்ளது, உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

ராஜ்

கிச்சன் கீர்த்தனா : காஞ்சிபுரம் இட்லி… மிளகு ஸ்பெஷல்!

பாஜகவின் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல்… முக்கிய நபர்கள் யார் யார்?

“மக்களவை சீட் வழங்கவில்லை என்றால்…” : ஸ்டாலினுக்கு ஜவாஹிருல்லா முக்கிய கோரிக்கை!

Jason Sanjay: படத்துக்கு ‘ஹீரோ’ கெடைச்சாச்சு!

+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *