பொது இடங்களில் செல்போனுக்கு சார்ஜ்: எச்சரிக்கும் ஆர்பிஐ!
பேருந்து நிலையம், ரயில் நிலையம், மால்கள் போன்ற பொது இடங்களில் சார்ஜர் போடும் இடங்கள் இருப்பதைப் பார்த்திருப்போம்.
சில நேரங்களில், அவசரத் தேவைக்காக அதில் நம் போன்களுக்கு சார்ஜர் கூட போட்டிருப்போம். இந்த மாதிரியான சூழல்களில் ஜாக்கிரதையாக இருக்குமாறு எச்சரித்திருக்கிறது ஆர்பிஐ ( இந்திய ரிசர்வ் வங்கி).
தொடர் பயணங்கள், தொலைதூர பயணங்கள், தொடர் மொபைல் பயன்பாடு போன்ற காரணங்களினால் மொபைல் போன் சார்ஜ் குறையலாம். நம்மால் எப்போதும் கையில் பவர் பேங்குகளை வைத்திருக்க முடியாது. இந்த சூழல்களில் பொது இடங்களில் இருக்கும் சார்ஜ் சாக்கெட்டுகள் நல்ல ஆப்ஷன்.
ஆனால், அந்த சாக்கெட்டுகளில் ஏற்கனவே தொங்கி கொண்டிருக்கும் சார்ஜர்களை பயன்படுத்தாமல், சாக்கெட்டுகளை (அதாவது ஸ்விட்ச் போர்டுகளை) மட்டும் பயன்படுத்துவது நல்லது. சார்ஜரில் வரும் கேபிள்களை யூ.எஸ்.பி கேபிள்களாக மாற்றியும் பயன்படுத்த முடியும்.
இந்த நிலையில் சார்ஜருக்குள் ஏதாவது சாதனத்தை ஒளித்து வைத்து, அந்த சார்ஜரில் மொபைல் போனை சார்ஜ் போடும்போது நம்மிடம் இருக்கும் தனிப்பட்ட தகவல்கள், வங்கித் தகவல்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் திருட முடியும். அதனால், பொது இடங்களில் மட்டுமல்ல, பொதுவாகவே சார்ஜ் போடும்போது நமது சார்ஜரை பயன்படுத்துவது தான் நல்லது.
அதாவது, பொது இடங்களில் இருக்கும் சாக்கெட்டுகளில் நமது சார்ஜர்களை பயன்படுத்தி சார்ஜ் போடலாம். ஆனால், அங்கேயே இருக்கும் சார்ஜர் மூலமாகவோ, கேபிள் மூலமாகவோ சார்ஜ் போடுவது தான் ஆபத்து என்று எச்சரித்திருக்கிறது இந்திய ரிசர்வ் வங்கி.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மோசடி… தலைமறைவான பெண் சிக்கியது எப்படி?
ஹெல்த் டிப்ஸ்: திடீரென சர்க்கரை அளவு குறைந்தால் நேரத்தைக் கடத்தாதீர்கள்!
பியூட்டி டிப்ஸ்: இரவில் தலைக்கு குளிக்கலாமா?
டாப் 10 நியூஸ்: ஸ்டாலின் கேரளா பயணம் முதல் 6 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் வரை!
கிச்சன் கீர்த்தனா: ஹெர்பல் பாஸ்தா