இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை குழு ரெப்போ வட்டி விகிதத்தை இன்று (டிசம்பர் 7) உயர்த்தியுள்ளது.
சில்லறை பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் 0.35 சதவிகிதம் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.

அதன்படி, ரெப்போ வட்டி விகிதமானது 5.90 சதவிகிதத்திலிருந்து 6.25 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் உயர்வால், வங்கிகளில் வாகனம், வீடு, தனிநபர் கடன் வாங்கியவர்களின் வட்டி விகிதம் உயரும்.
இந்த ஒரே ஆண்டில் 5-வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால், வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
முன்னதாக, கடந்த மே மாதம் 0.40 சதவிகிதம், ஜூன் மாதம் 0.50 சதவிகிதம், ஆகஸ்ட் மாதம் 0.50 சதவிகிதம், செப்டம்பர் மாதம் 0.50 சதவிகிதம் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியிருந்தது.
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ள நிலையில், வங்கிகளில் டெபாசிட் செய்தவர்களின் வட்டி விகிதத்தையும் உயர்த்தியுள்ளது.
உலகளாவிய பொருளாதார மந்தநிலையால், இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியானது 7 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், 6.8 சதவிகிதமாக ஜிடிபி வளர்ச்சி குறைய வாய்ப்புள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
செல்வம்