உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, பணவீக்கக் கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி இலக்குகள், நாணய நிலைத்தன்மை மற்றும் வட்டி விகித மேலாண்மை போன்ற நிலைகளை சிறப்பாக கையாளும் வங்கி ஆளுநர்களுக்கு “A+” முதல் “F” வரையிலான தரவரிசை பட்டியலை அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் குளோபல் நிதிசார் ஆய்வு இதழ் (GFMag.com) வெளியிட்டு வருகிறது.
உலகின் 100 முக்கிய நாடுகளின் ரிசர்வ் வங்கி ஆளுநர்கள், ஐரோப்பிய ஒன்றியம், கிழக்கு கரீபியன் மத்திய வங்கி, மத்திய ஆப்பிரிக்க வங்கி, மேற்கு ஆப்பிரிக்க மாநிலங்களின் மத்திய வங்கி மற்றும் ஆசிய வங்கிகள் உள்ளிட்ட ரிசர்வ் வங்கி ஆளுநர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து தரவரிசை மதிப்பீட்டு அளவுகோலை இந்நிறுவனம் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அதன்படி 2024 ஆண்டுக்கான குளோபல் ஃபைனான்ஸ் சென்ட்ரல் பேங்கர் அறிக்கை அடிப்படையில் இல் A+ கிரேடைப் பெற்ற மத்திய வங்கி ஆளுநர்கள் பட்டியலில்:
டென்மார்க் ரிசர்வ் வங்கி கவர்னர் கிறிஸ்டியன் கெட்டல் தாம்சன், இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், சுவிட்சர்லாந்து ரிசர்வ் வங்கி கவர்னர் தாமஸ் ஜோர்டான் ஆகியோர் A+ மதிப்பை பெற்றுள்ளதாக Global Finance இதழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உள்நாட்டு நிதி, பணவீக்கம், நாணய நிலைத்தன்மையை சரியான முறையில் கையாளாத ஆளுநர்களுக்கு A- தர மதிப்பீடு கொடுத்து.
அதன்படி கம்போடியா, கனடா, இந்தோனேசியா, ஜமைக்கா, மங்கோலியா, நார்வே, பிலிப்பைன்ஸ் மற்றும் அமெரிக்க ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் இந்த A- தரவரிசையில் இடம்பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது இந்த ஆய்வு நிறுவனம்.
இதனிடையே ஆசிய வங்கிகளில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி கந்தா தாஸ் இரண்டாவது முறையாக இந்த பட்டியலில் உயர்ந்த தர வரிசையை பெற்றுள்ளது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உலக அரங்கில் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவு செய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மணியன் கலியமூர்த்தி
வெளிமாநிலத்தில் இருந்து விநாயகர் சிலைகள்: உள்ளூர் மண்பாண்ட கலைஞர்கள் வேதனை!
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: மகாராஷ்டிராவில் வெடித்த மக்கள் போராட்டம்!