ராம நவமி கொண்டாட்டங்களுக்கு அயோத்தி ராமர் கோயில் தரிசனத்துக்கு நேரில் வர வேண்டாம் என்றும், கோயில் சிறப்பு நிகழ்வுகளை தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பில் காணலாம் என்றும் அயோத்தி கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
அயோத்தியில் எழுந்துள்ள பாலராமர் கோயில் அதன் முதல் ராம நவமி கொண்டாட்டத்தை எதிர்கொள்கிறது. இதனையொட்டி ராம நவமி தினமான நாளை (ஏப்ரல் 17) விமரிசையான ஏற்பாடுகள் அயோத்தி ராமர் கோயில் வளாகத்தில் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஆன்மிக நிகழ்வுகள் முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் வரை பலதும் அடங்கும்.
இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயிலின் முதல் ராம நவமி என்பதால், அதையொட்டிய கொண்டாட்டங்களுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அயோத்தியில் பக்தர்களின் கூட்ட நெரிசல் மற்றும் அதையொட்டிய தடுமாற்றங்களைத் தவிர்க்க இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ராமர் கோயிலில் நடக்கும் சடங்குகளை நேரடியாக ஒளிபரப்ப நகரின் 100 இடங்களில் எல்இடி திரைகள் வைக்கப்படும் என்று அயோத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பக்தர்கள் அனைவரும் ராமர் கோயில் வளாகத்தில் குவியும் போக்கை தவிர்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: தேங்காய்ப்பால் கோஸ் கறி
பியூட்டி டிப்ஸ்: மற்றவர்களிடமிருந்து விலக வைக்கும் வாய் துர்நாற்றம்… தீர்வு என்ன?
10 மணிக்கு மேல்… தொடர்ந்து அத்துமீறும் அண்ணாமலை
வேலைவாய்ப்பு: தேசிய புலனாய்வு முகமையில் பணி!