ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்வில் கிரிக்கெட் வீரர்கள் தோனி, ரோஹித், கோலி உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று(ஜனவரி 22) ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
மதியம் 12.30 மணியளவில் பிரதமர் மோடி இதில் கலந்து கொண்டு, கோயிலில் வைக்கப்பட்டு இருந்த ‘ராம் லல்லா’ எனப்படும் பால ராமர் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார்.
இந்த விழாவில் இந்தியா முழுவதுமிருந்து முக்கிய தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், கிரிக்கெட் பிரபலங்கள், தொழிலதிபர்கள், துறவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் கேப்டன் தோனி, இந்நாள் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் ரோஹித், கோலி கலந்து கொள்ளாததற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. ஜனவரி 25-ம் தேதி இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் தொடங்குகிறது.
இதற்காக தற்போது ரோஹித், கோலி இருவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாகவே அவர்கள் இருவரும் கலந்து கொள்ளவில்லை.
இதேபோல முன்னாள் கேப்டன் தோனிக்கும் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் அவர் இன்றைய விழாவில் கலந்து கொள்ளவில்லை.
அதற்கான காரணம் என்னவென்பது குறித்தும் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அதேபோல தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினும் இன்றைய விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“இது ஒரு புதிய கால சக்கரத்தின் தோற்றம்” : அயோத்தியில் மோடி உரை!
‘அரிமாபட்டி சக்திவேல்’ பட ஃபர்ஸ்ட் லுக்கில் அம்பேத்கரும் பெரியாரும்