ராகேஷ் ஜுன்ஜுன்வாலா: வீல் சேரில் இருந்தபடியே விமான சேவை நடத்தியவர்!

இந்தியா

பிரபல தொழில் அதிபரும், பங்குச்சந்தை முதலீட்டாளருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மாரடைப்பல்  இன்று (ஆகஸ்ட் 14) அதிகாலை மும்பையில் உயிரிழந்தார்.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா  பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யக்கூடியவர். இவரது சொத்து மதிப்பு 5.8 பில்லியன் டாலர் என்று போர்ப்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கப்பட்ட ஆகாஷா ஏர் விமான சேவையின் நிறுவனர் ஆவார். இதன் முதல் விமான சேவை மும்பை – அஹமதாபாத் ஆகஸ்ட் 7-ல் தொடங்கியது. மும்பையில் நடந்த இதன் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக ஜுன்ஜுன்வாலா வீல் சேரில் வருகை தந்தார்.

rakesh jhunjhunwala

இன்று அதிகாலை 6.45 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சிறுநீரக பிரச்சனை காரணமாக அவர் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் தான் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் சென்றுள்ளார். மும்பையில் இன்று மாலை அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

rakesh jhunjhunwala

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்தியாவின் 36-வது பணக்காரர் ஆவார். பங்குச் சந்தைகளில் அதிகமாக முதலீடு செய்ததன் காரணமாக, இந்தியாவின் வாரன் பப்பெட் என்று அழைக்கப்பட்டார்.

ஹங்காமா மீடியா மற்றும் ஆப்டெக் நிறுவனத்தின் இயக்குனராக இவர் உள்ளார். முப்பதிற்கும் மேற்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். அவற்றில் முக்கியமானது டைட்டன், டாட்டா மோட்டார்ஸ், மெட்ரோ பிராண்ட்ஸ் ஆகியவை பெரிய நிறுவனங்கள் ஆகும்.

ஜூன் 5,1960-ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இவருடைய தந்தை வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை செய்தார்.

rakesh jhunjhunwala

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா  மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ராகேஷ் ஜுன்ஜுன்வாலா  வெல்லமுடியாதவர். அவர் நிதி உலகிற்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளார். அவரது மறைவு சோகத்தை ஏற்படுத்துகிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

செல்வம்

சல்மான் ருஷ்டி மீது கொடூர தாக்குதல்: கொண்டாடும் ஈரான் பத்திரிக்கைகள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *