காலியாக உள்ள 15 மாநிலங்களைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (ஜனவரி 29) அறிவித்துள்ளது.
வரும் பிப்ரவரி 2 மற்றும் 3ஆம் தேதியுடன் உத்தரபிரதேசம், பீகார், சத்தீஷ்கர், குஜராத், அரியானா, ஆந்திரா, மத்தியபிரதேசம், இமாச்சலபிரதேசம், கர்நாடகா, மராட்டியம். தெலுங்கானா, உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா, ராஜஸ்தான் உட்பட 15 மாநிலங்களைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிகாலம் முடிவடைகிறது.
இந்த நிலையில் காலியாகும் 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் வேட்புமனு தாக்கல், பரிசீலனை மற்றும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி 8-ம் தேதி வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி பிப்ரவரி 15, வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 16, வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி பிப்ரவரி 20, தேர்தல் தேதி பிப்ரவரி 27 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும் இடங்களாக உத்தரபிரதேசம் (10), மராட்டியம் (6), பீகார் (6), மேற்கு வங்காளம் (5), மத்தியபிரதேசம் (5), குஜராத் (4), கர்நாடகம் (4), ஆந்திரபிரதேசம் (3), தெலுங்கானா (3), ராஜஸ்தான் (3), ஒடிசா (3), உத்தரகாண்ட் (1), சத்தீஷ்கர் (1). அரியானா (1) மற்றும் இமாச்சலபிரதேசம் (1) ஆகியவை உள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தங்கலானால் தள்ளிப்போகும் கங்குவா?
மூன்று சக்கர வாகனத்தில் இருந்து டூ வீலர் : ஹீரோவின் புதிய அவதார் இது!