உத்தரப்பிரதேச துணை முதல்வருடன் ஜெயிலர் பார்த்த ரஜினி

Published On:

| By Monisha

jailer movie with uttar pradesh deputy CM

உத்தரப்பிரதேச துணை முதல்வருடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஆகஸ்ட் 19) ஜெயிலர் படத்தைப் பார்த்தார்.

நெல்சன் தீலிப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

படம் வெளியாவதற்கு முன்பே ப்ரிவியூ ஷோ பார்த்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணம் சென்றார்.

4 ஆண்டுகளுக்குப் பிறகு இமயமலை சென்றுள்ள ரஜினி, ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றுள்ளார்.

நேற்று காலை ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங் தலைமையகம் சென்று சன்னியாசிகளை சந்தித்த பின்னர் மாலசி உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிற்கு சென்றார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் நாளை (இன்று) சேர்ந்து ஜெயிலர் படம் பார்க்க உள்ளேன்” என்று தெரிவித்தார்.

இன்று மாலை 7 மணியளவில் உத்தரப்பிரேதச மாநில முதல்வர் யோகி ஆதியநாத்தை சந்திக்க உள்ளார் ரஜினிகாந்த். யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பிறகு அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் செல்ல உள்ளார்.

முன்னதாக இன்று உத்தரபிரேதச துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா உடன் லக்னோவில் உள்ள பலாசியோ மாலில் ஜெயிலர் படத்தை பார்த்தார்.

படம் பார்த்த பிறகு துணை முதல்வர் கேசர பிரசாத் மவுரியா “நான் படத்தின் தொடக்க காட்சிகளை பார்த்தேன். இது நல்ல அனுபவமாக இருந்தது. ரஜினிகாந்தை உத்தரப்பிரதேசத்திற்கு வரவேற்கிறோம்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து உத்தரப்பிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா அவரது ட்விட்டர் பக்கத்தில்,

“இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “ஜெயிலர்” திரைப்படத்தின் சிறப்புக் காட்சியில் கலந்து கொண்டேன்.

காவல்துறை அதிகாரிகளின் எளிமையான வாழ்க்கையை இது சித்தரிக்கிறது. இந்தப் படத்தில் சிறப்பாகப் பணியாற்றிய நடிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று பாராட்டியுள்ளார்.

மோனிஷா

“தமிழகத்தில் சிறு, குறு தொழில் வளர்ச்சி முக்கியமானது” – ஸ்டாலின்

அதிமுக மாநாடு : எடப்பாடிக்கு எதிராகத் திரண்ட முக்குலத்தோர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel