உத்தவ் தாக்ரேவை சந்தித்த ரஜினிகாந்த்

அரசியல் இந்தியா

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்ரேவை நடிகர் ரஜினிகாந்த் இன்று (மார்ச் 18) சந்தித்தார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டு ரசித்தார். இந்த போட்டியைக் காண தனது மனைவி லதாவுடன் மும்பை சென்றார் ரஜினிகாந்த்.

2011ஆம் ஆண்டு இந்தியா உலக கோப்பையை வென்ற போது வான்கடே ஸ்டேடியம் சென்ற ரஜினிகாந்த் 12 ஆண்டுகளுக்குப் பின் தற்போது மீண்டும் அங்கு சென்றுள்ளார்.

நேற்று நடைபெற்ற போட்டியின் போது இந்திய கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்துப் பேசியதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று(மார்ச் 18) மும்பையில் உள்ள உத்தவ் தாக்ரேவின் வீடான மாதோஸ்ரீக்கு சென்றார். அங்கு உத்தவ் தாக்ரே, ஆதித்ய தாக்ரே உள்ளிட்ட அவரது குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசினார்.

இதுதொடர்பான புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஆதித்ய தாக்ரே, “ரஜினிகாந்த் மீண்டும் மாதோஸ்ரீக்கு வந்தது பெருமகிழ்ச்சி அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக 2010ஆம் ஆண்டு எந்திரன் பட புரோமோஷனின் போது ரஜினிகாந்த் மாதோஸ்ரீக்கு சென்று உத்தவ் தாக்ரேவின் தந்தையான பால் தாக்ரேவிடம் ஆசி பெற்றார்.

தாக்கரே குடும்பத்துடன் ரஜினிகாந்த் நல்ல உறவைக் கொண்டிருக்கும் நிலையில் இன்று இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பிரியா

நெப்போட்டிஸம்: மந்தையின் மனநிலை! – நடிகர் ராம்சரண் பளீர்

மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு!

+1
0
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *