rajasthan poll date changed

ராஜஸ்தான் தேர்தல் தேதி மாற்றம்!

இந்தியா

ராஜஸ்தான் மாநிலத்தின் சட்டசபைத் தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று (அக்டோபர் 11) அறிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை பதவிக்காலம் வரும் ஜனவரி மாதத்தோடு முடிவடைய உள்ளது.

அதனால் 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தலை வரும் டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்கத் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இதனையடுத்து கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானில் ஒரே கட்டமாக நவம்பர் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேர்தல் தேதியை மாற்றி அறிவித்துள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம். அதன்படி நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறவிருந்த வாக்குப் பதிவு நவம்பர் 25 ஆம் தேதி நடைபெற உள்ளது.

நவம்பர் 23 ஆம் தேதி முகூர்த்த நாள் என்பதால் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது என்று பல அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் வலியுறுத்தியதை தொடர்ந்து தேர்தல் தேதி மாற்றப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை அறிவித்தபடியே டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.

மோனிஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆளுநர் மாளிகை நவராத்திரி கொலு: பொதுமக்களுக்கு அனுமதி!

ரூ.60 கோடி சொத்துகுவித்த அனிதா ராதாகிருஷ்ணன்: அமலாக்கத்துறை வாதம்!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0