உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அடுத்த ஆண்டு கும்பமேளா நடைபெறுகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்க 45 கோடி பேர் 100 நாடுகளில் இருந்து வருதை தருவர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேச அரசு கும்பமேளாவுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 13 ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்குகிறது. பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி முடிவடைகிறது.
இதற்காக, ரயில்வேயும் 1,609 கோடி செலவிட்டு பல்வேறு நவீன வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. பிரயாக்ராஜ், வாரணாசி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இருந்து 13 ஆயிரம் ரயில்கள் கும்பமேளா சமயத்தில் பிரயாக்ராஜுக்கு இயக்கப்படுகிறது. இதில், 3,114 ஸ்பெஷல் ரயில்களும் அடங்கும். ஜனவரி 12 ஆம் தேதியில் இருந்து சிறப்பு ரயில்கள் அனைத்தும் இயக்கப்படும். பிரயாக்ராஜ்- அயோத்தி- வாரணாசி வழித்தடத்தில் மட்டும் 140 ரயில்கள் தினசரி இயப்படவுள்ளன. மெமு, டெமு ரக ரயில்கள் 16 கோச்சுகளுடன் இயக்கப்படுகின்றன.
பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் 1,400 சிசிடிவிக்கள் மற்றும் 200 முகம் பதிவு செய்யும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் பிரயாக்ராஜ் ரயில் நிலையம் சிசிடிவி கண்காணிப்புக்குள் இருக்கும்படி பாதுகாப்பு நவீனப்படுத்தப்பட்டுள்ளது. வாரணாசியையும் பிரயாக்ராஜையும் இணைக்க 1.9 கி.மீ நீளத்தில் கங்கை நதியில் இரு டிராக்குகள் கொண்ட புதிய ரயில் பாலமும் கட்டப்பட்டுள்ளது.
கடந்த 100 ஆண்டுகளில் பிரயாக்ராஜ் பகுதியில் கங்கை நதியின் மீது கட்டப்பட்ட முதல் ரயில் பாலம் இது. இந்த பாலத்தை விரைவில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். பிரையாக்ராஜ், வாரணாசி ரயில் நிலையங்கள் அருகே புதிய டிராக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், ஏராளமான ரயில்கள் ரயில் நிலையத்துக்குள் தாராளமாக வந்து செல்ல முடியும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
இந்திய முட்டைகளுக்கு கத்தார், ஓமன் தடை: நாமக்கல்லை தாக்கும் துருக்கி