ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் இதுதான்: அமைச்சர் அஸ்வினி

இந்தியா

ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்துக்கான உண்மையான காரணம் என்னவென்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று (ஜூன் 4) விளக்கம் அளித்துள்ளார்.

ஒடிசா பாலசோர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 3 ரயில்கள் மோதியதில் ஏற்பட்ட கோர விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 300ஐ நெருங்கியுள்ளது. மேலும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தொடர்ந்து மீட்பு பணிகளும், நொறுங்கிய ரயில் பெட்டிகளை அகற்றி தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

விபத்து குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள், இதற்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது பொறுப்பை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையே ரயில் விபத்துக்கான காரணம் குறித்த உயர்மட்ட அளவிலான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலையில் விபத்து நடந்த இடத்தில் தண்டவாள சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

விபத்துக்கான காரணத்தை கண்டுபிடித்துள்ளோம்

அப்போது செய்தியாளர்ளை சந்தித்த அஸ்வினி வைஷ்ணவ், ஒடிசா ரயில் விபத்துக்கான மூலக்காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “விபத்து இடத்தில் இருந்து அனைத்து உடல்களும் அப்புறப்படுத்தப்பட்டன. தண்டவாளம் சீரமைக்கும் பணியை வரும் புதன்கிழமை காலைக்குள் சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ரயில் விபத்துக்கான காரணம் குறித்து ரயில் பாதுகாப்பு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். அதன்மூலம் தற்போது விபத்துக்கான காரணத்தை கண்டுபிடித்துள்ளோம். விபத்துக்கு பொறுப்பானவர்களும் கண்டறியப்பட்டு இருக்கிறார்கள்.

ஒடிசா ரயில் விபத்து மின்னணு இண்டர் லாக்கிங் சிஸ்டத்தால் ஏற்பட்ட மாற்றத்தால் இது நடைபெற்றுள்ளது. மம்தா பானர்ஜி நேற்று கூறியது போன்று கவாச் பாதுகாப்பு அமைப்புக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. விசாரணை முழுவதும் முடிந்ததும் இதுகுறித்த அறிக்கையை வெளியிடுவோம்” என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

’ரயில்வே அமைச்சரே நீங்களாகவே பதவி விலகுங்கள்’: சுப்பிரமணிய சுவாமி

இணையத்தை கவரும் ருத்துராஜ் – உட்கர்ஷா திருமண புகைப்படங்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *