மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 59வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் நேருவின் சிலைகளுக்கும், படங்களுக்கும் அரசியல் தலைவர்கள் பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பியான ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் தொண்டர்கள் பலரும் மழையில் நனைந்தபடி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது முன்னாள் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளில் அஞ்சலி செலுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் முன்னாள் பிரதமர் நேருவின் வார்த்தைகளை சமூக வலைதளங்களில் சுட்டிக்காட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மோனிஷா
ஐடி அதிகாரிகள் மீது தாக்குதல்: திமுகவினர் மீது வழக்குப் பதிவு!
கரூர் துணை மேயர் வீட்டுக்கு சீல்: 2வது நாளாக தொடரும் ஐ.டி. ரெய்டு!